இதற்கு உதாரணமாக: -
அரேபியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த அரேபிய வணிகர்களின் நல்லொழுக்கத்தைப் பார்த்து இந்தியாவில் இஸ்லாம் வளர்ந்ததைக் கூறலாம்.
தற்காலத்தில், முன்னால் கிறிஸ்தவ மத போதகரும் தற்போதைய இஸ்லாமிய அழைப்பாளருமான ஷெய்ஹு யூசுப் எஸ்டஸ் அவர்கள் மிக எளிமையான நல்லொழுக்கம் உடைய எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவரை பார்த்து இஸ்லாத்தில் இணைந்ததைக் கூறலாம்.
இப்படி முஸ்லிம்களின் நல்லொழுக்கத்தைப் பார்த்து இஸ்லாத்தைத் தழுவியர்களின் பட்டியல் எண்ணிலடங்காதவை.
எனவே நல்லொழுக்கம் என்பது ஒரு அழைப்பாளருக்கு இன்றியமையாததாக இருக்கிறது.
2) அழைப்பு பணி செய்பவர்கள் தம்முடைய கொள்கையை அவசியம் பின்பற்ற வேண்டும் என யாரையும் வற்புறுத்தக் கூடாது. முஸ்லிம்கள் மீது விதிக்கப் பட்டுள்ள கடமை என்னவெனில் தீனுல் இஸ்லாத்தைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்து சொல்வது தான். அவற்றை ஏற்றுக் கொள்வதோ அல்லது நிராகரிப்பதோ அவரவர் விருப்பத்தை பொறுத்தது.
ஏனென்றால் மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என அல்லாஹ் கூறுகிறான். மேலும் இறைவன் யாருக்கு நேர்வழி காட்ட விரும்புகிறானோ அவர்கள் மட்டுமே சத்தியத்தை ஏற்றுக்கொள்வார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: -
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 2:256)
மறுமையில் அல்லாஹ் நீங்கள் எத்தனை பேர்களை இஸ்லாத்திற்கு மாற்றினீர்கள் என்று கேட்கப் போவதில்லை. மாறாக, நீங்கள் சத்திய இஸ்லாத்தை எடுத்துக் கூறி மற்றவர்களை அழைத்தீர்களா? என்று தான் இறைவன் கேட்பான்.
நாம் யார் யாரை தூய இஸ்லாத்தில் அழைக்க வேண்டும்?
அல்லாஹ் கூறுகிறான்: -
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (அல்-குர்ஆன் 66:6)
எனவே நாம் முதலில் நம்மை நாமே சீர்தூக்கி பார்த்து நம்மிடைய செயல்களை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இட்ட கட்டளைகளுக்கினங்க அமைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து நாம், நம்மைச் சார்ந்திரிருக்கின்ற நம் குடும்பத்தார்களை தூய இஸ்லாத்தின் பால் அழைக்க வேண்டும். அடுத்து நம் உறவினர்களையும், நம் அன்பிற்கு உகந்தவர்களையும், நன்பர்களையும், நம் கூட பணி செய்பவர்களையும் மற்றும் யாரெல்லாம் நம் கூற்றை கேட்பார்களோ அவர்களுக்கும் இஸ்லாத்தை எடுத்துரைக்க வேண்டும்.
அழைப்பு பணி செய்யாவிட்டால் ஏற்படும் நஷ்டம் என்ன?
நாம் மேலே கூறியது போல உண்மையிலேயே இறை நம்பிக்கை கொண்டு மறுமை, சுவர்க்கம், நரகம் அவற்றில் கிடைக்க கூடிய இன்ப துன்பங்கள் இவற்றை நம்பிக்கை கொண்டவர்கள் சத்திய இஸ்லாத்தை தம்முடனே வைத்துக்கொள்ள விரும்ப மாட்டார். அவர் அப்படி செய்தால் அவருடைய ஈமானில் கோளாறு இருப்பதாகவே கருதப்படும்.
அல்லாஹ் கூறுகிறான்: -
(அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், ‘அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்): ‘எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள். (அல்-குர்ஆன் 7:164)
நாளை மறுமையில் நம்மைப் படைத்தவனின் முன்னிலையில் நாம் நிறுத்தப்பட்டு இறைவனின் மேற்கண்ட வசனத்தின் மூலம் இட்ட கட்டளையை நிறைவேற்றினாயா இல்லையா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் ஏற்படும் சங்கடத்தை நாம் உணர வேண்டும்.
எனவே சகோதர சகோதரிகளே! முஃமினான நாம் அனைவரும் மார்க்கத்தின் மிகச் சிறந்த பணியாகிய
தஃவா என்னும் அழைப்புப் பணியை சரிவர செய்தவர்களாக நம்மை ஆக்கியருள வல்ல அல்லாஹ் போதுமானவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக