தமிழக அரசு தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம் மூலம் வேளான் படிப்புகளை மாணவர்களுக்கு பயிற்றுவித்து வருகின்றது. தமிழகத்தில் 13 அரசு வேளாண் கல்லூரிகள் மற்றும் 6 தனியார் கல்லூரிகளில் வேளாண் துறைசார்ந்த கீழ் காணும் படிப்புகள் பயிற்றுவிக்கபப்டுகின்றன.
பயிற்றுவிக்கப்படும் படிப்புகள்
4 ஆண்டு அறிவியல் படிப்புகள் : B.Sc.(Agriculture, Horticulture, Forestry, Home Science, Agricultural Engineering)
4 ஆண்டு பொறியியல் படிப்புகள் : B.Tech.(Biotechnology) , B.Tech.(Horticulture) , B.Tech.(Food Process Engineering) ,B.Tech.(Energy and Environmental Engineering) , B.Tech.(Bioinformatics) , B.S.(Agribusiness management ) ,B.Tech.(Agricultural information technology) .
மேற்கண்ட படிப்புகளில் சேறுவதற்கான விண்ணப்பம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி தேதி ஜூன் 6 (இன்ஷா அல்லாஹ்). விண்ணப்பத்தின் விலை ரூ.600.
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள் :
அனைத்து அரசு வேளாண் பலகலை கழகங்களிலும் கிடைக்கும், தபால் மூலமும் விண்ணப்பங்களை பெறலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
THE DEAN (AGRICULTURE) AND CHAIRMAN ADMISSIONS, Tamil Nadu Agricultural University , Coimbatore-641003
தகுதிகள் :
+2 தேர்வில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல், அல்லது கணிதம், இயற்பியல் வேதியியல் படித்து இருக்க வேண்டும், குறைந்தது 55% மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும் (முஸ்லீம்களுக்கு 50 % ). 21 வயதிற்க்கு மிகாமல் இருக்க வேண்டும்
மாணவர்களை தேர்ந்தெடுக்கும் முறை :
மேலே குறிபிட்டுள்ள 4 பாடங்களின் மதிப்பெண் அடிப்படையில் தகுதி பட்டியல் (Rank list ) தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர்கள் கல்லூரியில் அனுமதிக்கப்படுவார்கள், இதில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது.
அனைத்து விபரங்களும் www.tnau.ac.in இந்த உள்ளது. மேலும் வேளாண்படிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொள்ளsithiqu.mtech@gmail.com என்ற ஈ - மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்
S.சித்தீக்.M.Tech
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக