பால்ய காலம் தொடங்கி இன்று வரை நம்மை கடந்துபோன பெண்கள் எத்தனை பேர்,நம்மோடு தொடர்பில் இருக்கிற பெண்கள் எத்தனைப் பேர். கவிதாவோ, அமலாவோ, வினிதாவோ, சசிகலாவோ ஏதாவது ஒரு பெயரில் நம் வாழ்வில் நாம் மறக்க முடியாத ஒரு பெண்ணை நினைவுகளோடு அழைத்து வருவது எவ்வளவு பெரிய கொடுப்பினை.
தூங் கும் போது நம்மை நினைக்கிற மனிதர்களுக்கு மத்தியில் தூங்காமல் நம்மை பற்றி யோசிக்கிற அம்மா எப்படி பட்ட பெண். தெய்வத்திற்கு சமமான அவளைபெண் என்ற ஒரு வார்த்தையில் அடக்கிவிட முடியுமா? தன் இனத்திற்காக தன்னை எரித்துக்கொண்ட செங்கொடியை கும்பிடாமல் இருக்க முடியுமா?
ஏதோ ஒரு அற்ப காரணத்திற்காக நம்மை ஏமாற்றிப் போன பெண் மறக்க கூடியவளா? நம்மை மாற்றிப் போன பெண் எத்தனை சக்தி கொண்டவளாக இருந்திருப்பாள் . அவளுக்காக நாம் விட்டு கொடுத்த,இழந்த எல்லாவற்றையும் மீட்டெடுப்பது சாத்தியமா?
நம் கண்ணை கட்டி காட்டில் விட்ட பெண்ணை இப்போது நினைத்தாலும்,சி ன்ன புன்னகையோ,வெடித ்து தெறிக்கிற கண்ணீரோ,பொங்கி எழுகிற கோபமோ நம்முள் இருப்பதை எந்த தமிழ் இலக்கணத்தின் துணை கொண்டு சொல்ல. கவிதை எழுத வைக்கிற பெண்கள் எவ்வளவு அழகானவர்கள், ஒரு கதைக்கு காரணமானவள் எவ்வளவு வீரியமான பெண்ணாக இருந்திருப்பாள் , திரைப்படம் எடுக்க வைக்கிற பெண் எத்தகைய சிறப்பை கொண்டிருப்பாள். நம் வேலைக்கு பரிந்துரைக்கிற பெண் நமக்கு ஆசானாக அல்லவா இருந்திருப்பாள் .முப்பத்தைந்து வயதில் தூங்கும் முன்பாக நாம் நினைத்து பார்க்கும்மனிதர்களில் ஐந்தில் இருவர் பெண்ணாக இருப்பது எந்த கடவுளின் செயல்.
சாலையோர பெண்ஒரு பார்வை பார்த்து விட்டாள் என்பதற்காக பைத்தியமாக சுற்றிய காளையர்கள் எத்தனை பேர்.சுற்றிக் கொண்டிருக்கிற காளையர்கள் எத்தனை பேர்.சேது பட விக்ரமாகவோ,காதல ் பட பரத்தாகவோ இன்னும் தெளியாமல் இருக்கிற ஒரு மனநிலைக்கு எப்படி மாற்றி விட முடிகிறது ஒரு பெண்ணால்.தாஜ்மஹ ால் கட்டும் அளவுக்கு மும்தாஜ் அப்படி என்ன பாசத்தை ஷாஜகானுக்கு தந்திருப்பாள்.ப ெண்களை புரிந்து கொண்டவர்கள் நம்மில் எத்தனை பேர்.புரிந்து கொள்ள முயற்சித்து தோற்று போனவர்கள் வரிசையில் நாமும் இருப்பதை வரமென்று சொல்வதா சாபமென்று சொல்வதா?.அன்னை தெராசாவை நினைத்தாலே மனம் சாந்தமாக மாறி விடுவதை என்னவென்று சொல்வது.
மனைவி மேல் இருக்கிற கோபத்தையோ,காதலி யின் மேல் இருக்கிற கோபத்தையோ பக்கத்தில் இருப்போர் மீது காட்டுவது எத்தனை பேருக்கு பழக்கமாய் இருக்கிறது.பள்ள ி தோழியை அழைத்துக் கொண்டு பேருந்துக்கு ஓடிய நாட்களை எந்த கரும்பலகையில் எழுதி வைப்பது.பேருந்த ு நிறுத்தத்தில் ஆயிரம் பெண்கள் சூழ்ந்திருக்க நம் தோழியை மட்டும் சரியாக அடையாளம் கண்டு பிடிக்கிற வித்தையை யார் நமக்கு கற்று கொடுத்தது. தேவதைகள் கூட்டத்தோடு வாழ்ந்த கல்லூரி காலங்களை இப்போது நினைக்கும் போது எத்தனை வகையான பெண்கள் நம் கண் முன்னே வந்து போகிறார்கள்.நம் மோடு அரட்டை அடித்த,நம்மோடு சேர்ந்து சிரித்த,சேர்ந்த ு அழுத பெண்கள் எப்படியான இதயம் கொண்டவர்களாகஇருந்திருப்பார் கள்.
கொண்டு வந்த ஐம்பது கிராம் அரிசி சாதத்தை நமக்கே கொடுத்த பெண், சாப்பிடும் போதெல்லாம் நினைவுக்கு வருவதை தடுக்க முடிகிறதா நம்மால்.கல்வி சுற்றுலா செல்லும் போது நம் தோல் சாய்ந்து உறங்கிய பெண் இப்போதும் நம் உள்ளத்தில் சாய்ந்து கொண்டிருக்கிறாள ் என்பது எவ்வளவு பெரிய உண்மை.படத்திற்க ு போக காசு கொடுத்த பெண்,நம் தேர்வு கட்டணத்தை செலுத்திய பெண்,நாம் எழுத வேண்டியதை எல்லாம் விடிய விடிய அமர்ந்து எழுதி கொடுத்த பெண்,நம் காதலுக்கு தூது போன பெண்,அவளது புத்தகத்தில் நமது கையெழுத்தை கேட்ட பெண்,டேய் சாப்டியாடா என்று கேட்ட பெண்ணின் குரல் இப்போது நம் காதில் கேட்பதை எந்த வாக்கியத்தில் எழுத.
இப்படியான பெண்கள் எல்லோரும் தோழி என்ற உறவில் மூன்று ஆண்டுகள் நம்மோடு பயணித்ததை இறந்த காலத்தில் வைப்பதா இல்லை வாழ்ந்த காலத்தில்வைப்பதா? ஏதோ ஒரு பட்ட பெயர் வைத்து செல்போனில் அவள் பெயரை சேமித்து வைத்ததை நினைக்கும் போது இப்போது அழுகை வருகிறதா இல்லை சிரிப்பு வருகிறதா? கண்ணை மூடி பாருங்கள் உணர முடிகிறதா நம்மால்....
எத்தனை எத்தனை ஆழ்ந்த சிறப்பான சிந்தனைகள்... பாராட்டுக்கள்...
பதிலளிநீக்கு