கொடைக்கானாலும் ஊட்டியும் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் போகும் வ
ழியில் உள்ள மரங்கள், செடிகள், கொடிகள், நீர்நிலைகள், மலைகள் இவற்றைக் காண்பதிலேயே மகிழ்ச்சி தொடங்கக்கூடும் என்பதை நாம் உணர்வதில்லை. வாழ்வின் மகிழ்ச்சி சென்றடைவதில் தான் இருக்கிறது என்பதில்லை. பயணத்திலும் இருக்கிறது.
உங்கள் மீது உங்களுக்குள்ள உயர்வான எண்ணங்களும், தன்னம்பிக்கையும் கூட உங்கள் மகிழ்ச்சிக்கு அடிப்படை யாக அமையும். மகிழ்ச்சி சிறு செயல்களில் கூட இருக்கிறது. ''எனக்குத் தலைவலி, காய்ச்சல்,என் உடல் நிலை சரியில்லை,'' என்று நினைத்து வருந்தினால் மகிழ்ச்சி இல்லாமல் போவது சில நாட்கள் தான்.'நானே சரியில்லை,'என்று நினைத்தால் வாழ்நாள் முழுவதுமே மகிழ்ச்சி இல்லாமல் போகும்.
மனநிலை உடல் நிலையைப் பாதிக்கும். உடல்நிலை, மனநிலையில் தெரியும் ஏதாவது சாதனைகள் செய்தால் தான் மகிழ்ச்சி என்பதில்லை. சாலை ஓரத்தில் உள்ள புதர்களையும், காட்டுப் பூக்களையும் பார்த்து ரசிப்பது கூட மகிழ்ச்சி அளிக்கலாம். மழை கூட மகிழ்ச்சிதான். நனைந்துதான் பாருங்களேன்! ஒரு மழையைக்கூட தாங்காதா உங்கள் உடல்?
மகிழ்ச்சியான மனிதன் குற்றங்கள் புரிவதில்லை. மகிழ்ச்சியாய் வாழ பணம் தேவை. ஆனால் மகிழ்ச்சியைக் குறைத்துக் கொண்டு பணம் பண்ணும் போது வாழ்க்கை அடிபட்டுப் போகிறது. மகிழ்ச்சி என்பது பட்டாம் பூச்சியைப் போன்றது. நீங்கள் அதை விரட்ட விரட்ட, அது உங்களை விட்டுப் பறந்து கொண்டே இருக்கும். புல் தரையில் அமைதியாக அமர்ந்தால், அதுவும் உங்கள் கையில் அமர்ந்து கொள்ளும்.
பூங்காக்களுக்கு யாரும் வழி சொல்லியா தெரிய வேண்டும்?
அருமை... மனம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது...
பதிலளிநீக்கு