வியாழன், அக்டோபர் 11, 2012

அமெரிக்க வின் உளவுத்துறை comedy


அமெரிக்க வின் உளவுத்துறை அங்க வசிக்கும் முஸ்லிம் குடும்பகளை எவ்வாறு கவனிக்குதுநு பாருங்கள். அதனை பயன் படுத்தி நம் சகோதரர் எவ்வாறு புத்திசாலி தனமாக நடந்து கொண்டார்! என்பதை பாருங்கள்.

புத்திசாலி மகன்

நியூயார்க் நகரின் ஓரத்திலுள்ள ஒரு சிற்றூரில் 40 ஆண்டுகளாக வசித்து வரும் ஓர் அரபியர், தம் வீட்டுத் தோட்டத்தில் மூலிகைச் செடிகளும் உருளைக் கிழங்கும் பயிரிட விரும்பினார்.

அவரோ

வயது முதிர்ந்தவர்; தனியாள். பாரீஸின் கல்லூரி ஒன்றில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் தம் மகனுக்குத் தம் ஆசையையும் இயலாமையையும் விவரித்து ஒரு மின்மடல் எழுதினார்:

"அன்பு மகன் அஹ்மதுக்கு,

நம் வீட்டுத் தோட்டத்தில் உருளைக் கிழங்கு பயிரிட எனக்குக் கொள்ளை ஆசை. என்ன செய்ய? முதுமை என்னை வாட்டுகிறது. நீ மட்டும் இங்கிருந்தால் தோட்டத்தை உழுது செப்பனிட எனக்கு உதவுவாய் என்பது திண்ணம்.

அன்புடன்
- உன் தந்தை"

மகனிடமிருந்து உடனே மறுமொழி வந்தது:

"என் அருமைத் தந்தையே ,
தோட்டத்தைத் தோண்டி விடாதீர்கள். அங்குத்தான் முக்கியமான ஒரு பொருளைப் புதைத்து வைத்திருக்கிறேன்.

உங்கள் அன்பு மகன்
- அஹ்மது"

அன்று மாலை நான்கு மணியிருக்கும்.

வனத்துறை அலுவலர்கள் சிலர் புடைசூழ, எஃப் பி ஐ அதிகாரிகள் அரபியரின் வீட்டுத் தோட்டத்திற்குள் படையெடுத்தனர். தோட்டத்தை அங்குலம்-அங்குலமாகத் தோண்டித் துருவி, தேடு-தேடென்று 'முக்கியப் பொருளை'த் தேடினார்கள். தோட்டத்தையே சல்லடை போட்டு சலித்தும் ஒன்றும் கிடைக்காமல் இறுதியில் சலிப்புற்றுச் சென்று விட்டனர்.

அடுத்த நாள் அஹ்மதிடமிருந்து இன்னொரு மின்மடல் வந்தது:

"அன்புத் தந்தையே,
உருளை பயிரிடுவதற்கு ஏற்றதாகத் தோண்டப் பட்டு, இப்போது நம்முடைய தோட்டம் சீரமைக்கப் பட்டிருக்கும் என்று நம்புகிறேன். ஏதோ, இங்கிருந்து கொண்டு என்னால் உங்களுக்கு உதவ இயன்றது இவ்வளவுதான்.

அன்பு மகன்
- அஹ்மது"

1 கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...