செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

சுதந்திரம் அருமை அறிய சுதந்திரம் வேண்டும்



சுதந்திரம் வந்தால் விடுமுறை அதனால் அதிகமாக தொலைகாட்சி நிகழ்சிகள் பலவிதம் . தொலைக் காட்சியினர் குடும்பங்களை சோம்பேறியாகவும் பொறுப்பு இல்லாதவனாகவும் மாற்றி தவறான காட்சிகளை காட்டியும் நிறைய பொருள் ஈட்டுகின்றனர்.
விடுமுறை கிடைத்ததால் ஓய்வு மற்றும் ஊர் பொய் வரலாம். இதுதான் நடக்கின்றது. மற்ற பண்டிகை நாட்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் சுதந்திர நாள் ,மற்றும் குடியரசு நாள் கொண்டாடத்திற்கு கொடுக்கப்படுவதில்லை. இது மனதோடு ஒன்றாத ஒரு நாளாகவே வந்து மறைகின்றது
சுதந்திரம் அருமை இக்கால இந்திய மக்களுக்கு சுதந்திரத்தின் அருமை தெரிய வாய்ப்பில்லை. அரசு விழாக்கள் கொடி ஏற்றும் நிகழ்வுடன் ஆயுத வலிமை காட்டி ஊர்வலம்.இத்துடன் முடிகின்றது
சாதாரண வெறுப்பான காதலர் தின கொண்டாட்டங்களுக்கு கிடைக்கும் உற்சாகம் கூட மக்களிடத்தில் இல்லை.
பெரும்பான மக்கள் ஆங்கிலேயன் ஆட்சியைக் காணவில்லை. மற்ற நாடுகள் சுதந்திரம் பெறுவதற்கு அடைந்த சிரமங்களும், தொல்லைகளும் அடைந்த துன்பங்களை குறைக்க காந்தி அடிகள் நமக்காக அயராது பாடுபட்டு குறைத்து விட்டார் . அல்ஜீரியா மக்கள் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து பெற்ற துன்பங்கள் நம்மை விட அதிகம். இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயனுக்கு ஒரு நெருக்கடியை ஹிட்லர் உண்டாக்கியதால் நம் தயவை நாடி அங்கிலேயர் வர வேண்டிய கட்டாய நிலை .அதை அருமையாக ,சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டார் காந்தி அடிகள். அவருக்கு கிடைத்த உயர்ந்த தொண்டனாக நேரு அமைந்தது இந்திய நாட்டின் சுதந்திரச் செடி நன்கு வேருடன் கூடிய ஆலமரமாக தெற்காசியாவில் நிலை பெற வாய்ப்பானது , மலேசியா மற்றும் சிங்கப்பூரிலும் இது நிலையானது , சுதந்திரம் பெற்ற பின்பும் முதலில் கடுமையான முறையை கையாள்வதின் வழியே மக்களுக்கு நன்மை செய்ய முயன்றதால் மக்கள் அவரை நேசிக்க ஆரம்பிக்க முயன்றனர் , அதன் பின்புதான் மக்களுக்கு கட்டுப்பாடான உரிமைகளை தர ஆரம்பித்தார் . அனைத்து மக்களையும் ஒரே கண் கொண்டு பார்த்தார் . மத வேறுபாடு காரணமாக சண்டை வராமலும் மற்றும் அனைத்து மக்களும் நேசத்துடன் வாழ வேண்டும் என்பதில் முக்கியம் கொடுத்தார் . அது ஒரு மிகவும் சிறிய நாடாக இருந்ததால் அவர் நினைத்ததை அவரால் சாதிக்க முடிந்தது அதனால் லிகுவான்கியு மக்கள் மனதில் நிலையான இடம் பிடித்தார்,
நம் நேருஜி அவர்கள் அதேபோல் உயர்வான கொள்கைகளை பெற்றிருந்தும் அவர் ஒரு போதும் அடக்கு முறையை கையாள முயலவில்லை, அதனால் மக்கள் நேருவை மிகவும் நேசித்தனர் ,நேருவின் அறிவு அவருக்கு கை கொடுத்தது, அதனால் நம் அண்டை நாடுகள் அனைத்தும் (மலேசிய மற்றும் சிங்கப்பூரைத் தவிர ) பெயருக்குத்தான் மக்களாட்சி ஆனால் ஆள்வது முப்படை வீரர்கள்தான். இந்தியாவில் வாழும் மக்கள் மனித உரிமையின் மாண்பினை நன்கு அனுபவித்து விட்டனர் . இங்கு ஒரு காலமும் இராணுவ ஆட்சி வராது. அதன் பெருமை காந்திக்கும்,நேருக்கும் அவர்களுக்கு உரு துணையாக இருந்தவர்களுக்கும் போய்ச் சேரும்.

சுதந்திர வந்து நமக்கென்று பல்வேறு நாடுகளிலுருந்து எடுக்கப்பட்ட நன்மை பயக்கக் கூடிய ஒரு கலவையாகத்தான் நமது அரசியல் சாசன சட்டங்கள் உருவாக்கப்பட்டன . அது தொடர்ந்து காலத்தின் கட்டாயத்தை கருதி பல மாற்றங்களை ஏற்படுத்த அவசியம் வந்து ஏகப்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தேவைதான் .
இருபினும் அதிலும் ஒரு ஓட்டையை தெரிந்தோ தெரியாமலோ வைத்து விடுகின்றனர் .A law without exception is no law

இது போதும் பலர் தவறு செய்த பின் தப்பிக்க . ஊழல் செய்பவர் ஊழலை ஒழிக்க வேண்டும் என்கிறார். தேர்தல் வந்தால் பணம் வாரி இறைக்கபடுகின்றது . சட்டம் இருப்பது மக்களை பாதுகாக்க அந்த சட்டமே பாதிக்கப்பட்டவனுக்கு சாதகமாக அமையாமல் பொய் விடும் நிலையும் நாம் பார்க்கின்றோம் . “சட்டம் ஒரு இருட்டறை அதிலே வக்கீலின் வாதம் ஒரு ஒளி விளக்கு ஏன்று அண்ணா சொன்னார்” . வாதம் செய்பவரே இருட்டில் மாட்டிக்கொள்ளும் நிலை மிகவும் வேதனையாக உள்ளது .
சுதந்திரத்தின் அருமை தெரிய ஒவ்வொரு மனிதனும் திருந்த வேண்டும்’ வெறும் கொண்டாடத்தினால் ஒரு நன்மையும் விளையாது . வீண் விரயங்களை கட்டுப் படுத்த வேண்டும் . தலைவர்கள் வாழும் முறை மக்களுக்கு நல்வழி காட்டும். தலைவன் சரியில்லையென்றால் தொண்டன் தலைவன் வழிதான் தொடர்வான். உடலுக்கு ஆபத்து வராமல் தலைக்குத்தான் ஹெல்மெட் . முதலில் தலையை பாதுகாத்துக் கொள்ளுங்கள் , தலைமையை முறைபடுத்திக் கொள்ளுங்கள் , பின்பு அனைத்தும் சிறப்பாக அமையும் . போதும் ‘ஹீரோ வொர்ஷிப்’வேண்டாம் சுய சிந்தனை தழைக்கட்டும் அது உரிமையை பாதுக்காக்கும் , அப்பொழுதுதான் சுதந்திரம் முழுமையடையும்

2 கருத்துகள்:

  1. நல்ல கருத்துக்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...

    ஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!

    பதிலளிநீக்கு
  2. உங்களுக்கும் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...