பெண்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கும் அம்சம் வெள்ளைப்படுதல். இதனால் மன அழுத்தமும், வேறு எந்த விசயத்திலும் கவனம் செலுத்த முடிவதில்லை. உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் இந்த வெள்ளைப்படுதலுக்கு இயற்கையிலே மருந்திருக்கிறது என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.
பொதுவாக ஒரு சில பெண்களுக்கு பூப்பெய்திய காலம் தொட்டே வெள்ளைப் படுதல் இருக்கும். ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும். அதிக உஷ்ணம், மேகவெட்டை போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.
தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படும். சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய் பரவ வாய்ப்புண்டு.
அதீத சிந்தனை, காரம், உப்பு மிகுந்த உணவு அருந்துதல் போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.அதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப் படுதல் உண்டாகிறது.
இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் மிகப் பெரிய நோய்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடும். எனவே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.
தலைவலி
வெள்ளைப் படும் காலங்களில் உடல் சோர்வு, அடிவயிறு வலி, கை கால் வலி உண்டாகுதல். இடுப்பு வலி, முதுகு வலி போன்றவை உண்டாதல். வெள்ளைப்படும் இடங்களில் அரிப்பு, எரிச்சல் உண்டாதல். சிறுநீர் மிகுந்த எரிச்சலுடன் வெளியேறும் என்கின்றனர் மருத்துவர்கள்
உஷ்ணமான உணவு
வெள்ளைப்படுதலை தவிர்க்க உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
எண்ணெய் தேய்ங்க
அதிக காரம், புளிப்பு, உப்பு இவற்றை குறைக்க வேண்டும்.உணவில் வெண்ணெய், பால், மோர் போன்ற உணவுப் பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உடலை நன்கு சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். உடல் சூட்டை குறைக்க தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இது மனது தொடர்பான விசயம் என்பதால் பயம், மன உளைச்சல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.
மணத்தக்காளி சூப்
இந்த வெள்ளைப் படுதல் நோயை குணப்படுத்த வீட்டிலே மருந்துள்ளன. மணத்தக்காளி கீரை சூப் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. மணத்தக்காளியுடன், பூண்டு, மிளகு, சின்னவெங்காயம், சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து சூப் வைத்து குடிக்கலாம். இதனால் உஷ்ணம் குறையும், வெள்ளைப்படுதல் குணமாகும்.
அருகம்புல்
ஓரிதழ் தாமரை இலைகளை நன்கு நீர்விட்டு அலசி அரைத்து எலுமிச்சம் பழம் அளவு உருண்டை எடுத்து காய்ச்சாத பசும் பால் அல்லது வெள்ளாட்டுப் பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் எளிதில் குணமாகும்.
அருகம்புல்லை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 4 குவளை நீரில் கொதிக்க வைத்து அது நன்கு வற்றிய உடன் அதனுடன் மிளகுத்தூள் தேவையான அளவு பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளையும் 15 நாட்கள் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.
இதனை முறையாக செய்து அருந்தினால், வெள்ளை நோயின் பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடலாம் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக