ஞாயிறு, மே 12, 2013

கதவு திறக்கும்’

திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர்.அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடது என்பது தான் அந்த போட்டி.

போட்டி துவங்கிய சில மணி நேரத்திலே கணவரின் பெற்றோர்கள் கதவை தட்டினர். கணவர் கதவை திறக்கலாம் என்று நினைக்கும் போது, போட்டி நியாபத்துக்கு வரவே கதவை திறக்காமலே இருந்தார்.அவரின் பெற்றோரும் சிறிது நேரம் கதவு அருகிலேயே நின்றிருந்து, கதவு திறக்காததால் சென்று விட்டனர்.

சில மணி நேரத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் கதவை தட்டினர்.கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.மனைவியால் தன் பெற்றோர் வெளியே நிற்பதை பார்க்க முடியாமல் கண் கலங்கி கொண்டே என்னால் இனி மேலும் சும்மா இருக்க முடியாது என்று கூறியவாரே கதவை திறந்து விட்டாள்.கணவரும் ஒன்றும் சொல்லவில்லை .

நாட்கள் உருண்டோடின, அவர்களுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் பிறந்தது.

அவள் கணவரும் தனக்கு மகள் பிறந்ததை கொண்டாட பெரிய விருந்து ஏற்பாடு பண்ணினார்.மகிழ்சியுடன் விருந்து நடந்து முடிந்தது.
அன்று இரவு அவர் மனைவி நமக்கு மகன்கள் பிறந்த போது இந்த அளவு நீங்கள் கொண்டாடவில்லையே என்று கேட்டார்.அதற்கு அவள் கணவர் ...

”என் மகள் தான் நாளை எனக்காக கதவை திறப்பாள் ” என்றார்.

பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள். பெண்மையை போற்றுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...